மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் மீது டேங்கர் லாரி மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் தெருவில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமவர்ஷினி என்ற ஒரு மகள் உள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பணி முடிந்து வீட்டிற்கு மாதவரம் நெடுஞ்சாலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, தண்ணீர் ஏற்றி வந்த டேங்கர் லாரி திடீரென இவரது மோட்டார் சைக்கிளின் மீது மோதிவிட்டது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்துக்கான காரணமான லாரி டிரைவர் மீது வழக்கு பதிந்து போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.