Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு… செமஸ்டர் தேர்வு தள்ளிவைப்பு… வெளியான அறிவிப்பு…!!!

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிக்கப்பட்டிருந்த தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால் நேற்று முதல் தமிழகம் முழுவதிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து இந்த மாதம் இறுதியில் அண்ணா பல்கலைக்கழகம் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிக்கப்பட்ட தேதியில் கேட் தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் வருகின்ற பிப்ரவரி 6 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற இருந்தது. அன்றைய தினத்தில் கேட் தேர்வு நடைபெற இருப்பதால் பிப்ரவரி 16 மற்றும் 17ம் தேதிகளில் தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.

Categories

Tech |