Categories
லைப் ஸ்டைல்

மாடித்தோட்டம் அமைக்கனுமா?…. முக்கியமான5 டிப்ஸ் இதோ…!!!

தங்கள் வீட்டிலேயே மாடி தோட்டம் அமைக்க விரும்புவோருக்கு முக்கியமான 5 டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் மக்கள் தொகைக் காரணமாக தற்போது வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்த காலம்மாறி மாடியில் தோட்டம் வைக்கும் காலம் வந்துவிட்டது. அதோடு இன்று முற்றுலும் பூச்சிக்கொள்ளி மருந்துகள் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் காய்கறிகளைப் பயனப்டுத்தும் எண்ணமும் மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக இன்று பலரும் தங்கள் வீட்டு மாடியிலேயே தோட்டம் அமைத்து காய்கறிகளை வளர்க்கத் தொடங்கிவிட்டனர்.

இந்த மாடித்தொட்டத்தின் மூலம் இன்று பெரும்பாலானோர் தங்களது வீட்டிற்கு தேவையான அத்தியாவசியக் காய்கறிகள் அனைத்தும் கிடைக்கின்றது என்கின்றனர். உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்கும் முன் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான 5 விசயங்களைப் பார்ப்போம்.

டிப்ஸ் 1

மாடித்தோட்டத்தில் நாம் பூச்சிக்கொள்ளி மருந்துகளை நிச்சயம் பயன்படுத்தப்போதில்லை. அதற்கு மாற்றாக சரியான நேரத்தில் செடிக்கு இயற்கை உரமிடவேண்டும். மேலும், செடிகளில் பூஞ்சை நோய்களின் தாக்குதல்கள் அதிகமாக இருக்கும். அதற்கு வாரத்தில் ஒரு முறை செடிகளுக்கு வேப்பம்பிண்ணாக்கு கரைசல் அல்லது இஞ்சி பூண்டு விழுதுகளை அரைத்து செடிகளின் மீது தெளித்துவிடுங்கள்.

டிப்ஸ் 2

ஒரு சில தாவரங்கள் வறட்சியைத் தாங்கக்கூடியதாக இருக்கும். ஆனால் ஒரு சில தாவரங்கள் குறைந்த வெப்பத்தில் வளரவேண்டும். தாவரங்களின் தன்மையைத் தெரிந்துக்கொண்டு சரியான தட்பவெப்ப நிலையுள்ள இடத்தில வைக்க வேண்டியது மிகவும் அவசியம்.

டிப்ஸ் 3

பகல் நேரங்களில் செடிக்கு தண்ணீர் ஊற்றக்கூடாது. இதனால் அதிக சூரிய வெப்பத்தினால் செடிகள் கருகிவிடும். காலை அல்லது மாலை வேலைகளில் தண்ணீர் ஊற்றவேண்டும்.

டிப்ஸ் 4

மாடித்தோட்டம் அமைக்கும் முன் தொட்டியில் வெறும் மண் மட்டும் வைத்து நிரப்புவது தவறு. நீங்கள் செடி வைக்கவுள்ள தொட்டியில், மண்ணில் மக்கக்கூடிய பொருட்களான, காய்ந்த இலை, சமையலறை கழிவுகள், காகிதங்கள், முட்டை ஓடுகள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து 15 நாட்கள் வரை மண்ணை மூடி வைக்கவும். பின்னர் செடிகளைப் பயிறடவும்.

டிப்ஸ் 5

செடிக்கு தண்ணீர் ஊற்றும் போது அதிக கவனமுடன் இருக்க வேண்டும். கூடுதலாக தண்ணீர் விடக்கூடாது. அளவுக்கு அதிகமாக ஊற்றும் போது வேர்கள் அழுகிவிடும். அதிக வெப்பம் உள்ள காலங்களில் இரண்டு வேலைகளாகப் பிரித்து தண்ணீர் ஊற்றலாம்.

Categories

Tech |