வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகிலுள்ள பொம்மணம்பட்டியில் வசிப்பவர் அழகர்சாமி. இவர் வேன் ஓட்டுநராக பணியாற்றுகிறார். இவர் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் சில ஆண்டுகளில் அந்த பெண் அழகர்சாமியை பிரிந்து சென்றுள்ளார். இதனால் அழகர்சாமி தன் தாயாருடன் வசித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் அவரது காதல் மனைவி கடந்த ஆண்டு வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அழகர்சாமி குடிக்கு அடிமையானார். மனைவி பிரிந்த ஏக்கம் அவரை வாட்டியுள்ளது. இதையடுத்து நேற்று அழகர்சாமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அம்பாத்துறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.