Categories
உலக செய்திகள்

நான் பட்ட கஷ்டத்தை நீங்கள் படக்கூடாது… மாஸ்க் போடுங்க… சானியா மிர்சா ட்வீட்…!!!

நான் பட்ட கஷ்டத்தை நீங்கள் யாரும் படக்கூடாது என்று சானியா மிர்சா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

இருந்தாலும் முக கவசம் அணிவது கட்டாயம் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால் அதனை சிலர் அலட்சியமாக கருதுகின்றனர். இந்நிலையில் கொரோனாவை விளையாட்டாக எண்ணி விட வேண்டாம் என சானியா மிர்சா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இம்மாதத் தொடக்கத்தில் கொரோனாவுக்கு ஆளானேன். உடல் ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் எதிர்கொள்வது கடினம். தயவுசெய்து முககவசம் அணியுங்கள். கைகளை நன்கு கழுவுங்கள். உங்களையும் உங்கள் அன்புக்கு உரியவர்களையும் பாதுகாத்திடுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |