Categories
மாநில செய்திகள்

“சட்டமன்ற தேர்தல் 2021” எல்லாம் சரி பார்த்தாச்சு…. வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியல்….!!

வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

நடப்பு ஆண்டில் தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.இத்தேர்தலை முன்னிட்டு  தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம், பெயர் திருத்தம், ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு மாறுதல், மற்றும் பிழை திருத்தங்கள் போன்றவைக்கான சிறப்பு முகாம்கள் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்  நடைபெற்றுது.

இந்த திருத்தங்களுக்காக  சிறப்பு முகாம்களிலிருந்தும் ஆன்லைன் மூலமாகவும் 29 லட்சத்து 72 ஆயிரத்து 899 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதையடுத்து அந்த விண்ணப்பங்களை பரிசீலித்து தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. தற்போது வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நிறைவு பெற்றதால் இன்று தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

Categories

Tech |