Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணனும்” காதலுக்கு நோ சொன்ன பெற்றோர்…. பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு….!!

காதலித்தவரை விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் வற்புறுத்தியதால் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகில் உள்ள கலியங்காராஜபுரத்தில் வசிப்பவர் சோமன். இவருடைய மகன் பெயர் கிரன். பெயிண்டராக பணிபுரியும் அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். மேலும் கேரளாவில் பெண் பார்த்து வந்துள்ளனர். இதனால் கிரண் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உறவினர்களுடன் பேசாமலும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இரவு உணவிற்குப் பிறகு தனது அறைக்குள் சென்றவர் காலை வெகுநேரமாகியும் அறை கதவை திறக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய தாயார் வீட்டில் ஜன்னல் கதவைத் திறந்து பார்த்தார். அப்பொழுது அறையில் கிரண் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் அலறினார். அவருடைய சத்தம் கேட்டு உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அதன்பின்னர் நித்திரவிளை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |