தன் காதல் மனைவி பிரிந்து சென்றதால் துயரம் தாங்காமல் வாலிபர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள பணவிலை வடலிவிலை பகுதியில் வசிப்பவர் நிர்மல். தொழிலாளியான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முட்டை காடு பகுதியைச் சேர்ந்த சிந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிந்து தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவி பிரிந்து சென்றதனால் நிர்மல் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு நிர்மல் தனது தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அறைக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் தந்தை அறையில் சென்று பார்த்தபோது நிர்மல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தக்கலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.