திருப்பதி ஏழுமலையானை பிப்ரவரி மாதம் தரிசிக்க ரூ.300 சிறப்பு கட்டண டிக்கெட்டானது இன்று முதல் வழங்கப்பட உள்ளது. அதற்கான முன்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கும்.
www.tirupatibalaji.ap.gov.in என்ற கோவிலின் இணைய முகவரிக்கு சென்று கணக்கு தொடங்கிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு பயனர் பெயர், கடவுச் சொல் தந்து உள்நுழைந்து டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம். கொரோனா சூழல் காரணமாக தினசரி 20 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
இன்றைய தினமே 3 மணியிலிருந்து தங்கும் விடுதிகளுக்கான முன் பதிவும் ஆரம்பிக்கின்றன. ரூ.100, ரூ.1,000, ரூ.1,518 ஆகிய வகைகளில் விடுதிகள் கிடைக்கும்.