Categories
தேசிய செய்திகள்

திருப்பதி மலையில் செம ஷாக்…. 2,830 வது படியில் நடந்த அதிர்ச்சியால்…. குடும்பமே ஓடிய சம்பவம்…!!

திருப்பதி மலையில் ஒரு குடும்பம் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் அமைந்துள்ள ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருப்பதி அடிவாரத்தில் இருந்து சாலை மார்க்கமாக பக்த்ர்கள் வாகனங்களில் பயணிக்கின்றனர். வேண்டுதல் காரணமாக அலிபிரி மூலம் மலைக்கு நடந்து செல்லும் பக்தர்களும் இருக்கின்றனர். இப்படி கடந்து செல்லும் பாதையை சுற்றிலும் அடர்ந்த காட்டுப் பகுதி அமைந்துள்ளது. மேலும் வனவிலங்குகள் வெளியே வராத வகையில் வனத்துறை சார்பில் உரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் பக்தர்கள் நடந்து செல்ல ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் குர்நூல் மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் திருப்பதி மலைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதில் சுனில் அவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோர் அலிபிரி நடைபாதை வழியாக திருமலைக்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது 2,830 படியில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் அவர்களை சூழ்ந்துள்ளனர். பின்னர் அவர்கள் அந்த குடும்பத்தின் மீது டார்ச் லைட் அடித்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளை கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து சுனில் குடும்பம் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது. மேலும் அவசர உதவி எண் 100க்கு அழைத்துள்ளனர். இது குறித்து காவல் துறைக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் ஐந்து நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அப்போது சுனில் குடும்பத்தார் நடந்த விவரங்களை காவல்துறையினர் கூறியுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் பாதுகாப்பதற்காக திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Categories

Tech |