சென்னையில் தற்போது இரண்டு பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.
தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக அளவில் கொரோனா பரவல் இருந்தது. இதனை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு கட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்தது. தற்போது தான் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது. இதனால் சென்னை வாசிகள் சற்று நிம்மதியுடன் வெளியில் சென்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
இன்று சென்னை கோடம்ப்பாக்கம், டிரஸ்ட் புரம் பகுதியில் இருவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதையடுத்து சுகாதாரத்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கொரோனாவை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மீண்டும் அச்சத்தில் உள்ளனர்.