‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிப்பதாக பரவிய தகவலுக்கு அருண் விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இதையடுத்து நடிகர் விஜயின் 65வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது . சமீபத்தில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து மிரட்டிய அருண் விஜய் ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் பரவியது . இந்நிலையில் இதனை அருண் விஜய் தரப்பு திட்டவட்டமாக மறுத்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது .