ஒவ்வாமை பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போடக்கூடாது என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகின்றது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த 16ஆம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட இருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலரும் தடுப்பூசி போட தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த கோவிஷீல்டு தடுப்பூசியில் அடங்கியுள்ள மருந்து பொருட்களுக்கு ஒவ்வாமை உடையவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள கூடாது.
முன்னரே ஒவ்வாமை குறித்து சுகாதார பணியாளரிடம் தெரிவிக்க வேண்டும். கர்ப்பமாக இருந்தாலும், கர்ப்பம் தரிக்க திட்டமிட்டு இருந்தாலும் தாய்ப்பால் கொடுத்தாலும் கூறிவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல், ரத்த கோளாறு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அது பற்றியும் கூறி விட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.