Categories
அரசியல் மாநில செய்திகள்

நீ முதல்வர் ஆகவே முடியாது… உங்களை கட்டாயம் வெளியேற்றுவோம்… பன்னீர்செல்வம் அதிரடி…!

எக்காலத்திலும் ஸ்டாலின் முதல்வர் ஆகவே முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை கண்ணகி நகரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் அவர் பொதுமக்களிடம் பேசியதாவது, அதிமுகவில் யாரும் ரவுடித்தனம், அடாவடித்தனம் போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதில்லை.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் எங்களது கட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத இரும்புக் கோட்டையாக உருவாக்கி கொடுத்துள்ளனர். அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருப்பதே நமக்கெல்லாம் பெருமை. கடந்த 10 ஆண்டுகளாக மக்களின் வெறுப்புகளை சம்பாதிக்காத நல்லாட்சியாக அதிமுக திகழ்கிறது.

திமுகவை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அதிமுக உருவாக்கப்பட்டுள்ளது. எக்காலத்திலும் ஸ்டாலின் முதல்வர் ஆகவே முடியாது.  திமுக பதவிக்காக ஆசைப்பட்டு தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுத்தது என்று கூறினார்.

Categories

Tech |