Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுக்கு ஈபிஎஸ் வச்ச செக்… மொத்த ஆட்டமும் குளோஸ்…!!!

ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகும் அதே நாளில் ஜெயலலிதா நினைவிட பிறப்பை இபிஎஸ் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுகிறார். அதனால் நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திப்பதற்கு டெல்லி பயணம் சென்றிருந்தார்.

இதனையடுத்து ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா சிறையில் இருந்து விடுதலை என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. ஆனால் அதே 27ஆம் தேதி தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவும் நடைபெறுகிறது. சசிகலா வெளியே வந்தால் முதலில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு தான் செல்வார். அது சென்டிமென்ட்டை உருவாக்கும் என்று கணக்கிட்டு தான், அவர் வராமல் தடுக்கும் வகையில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பை அன்று வைத்துள்ளாரோ இபிஎஸ் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சசிகலா சிறைக்குச் செல்வதற்கு முன் ஜெயலலிதா நினைவிடத்தில் சபதம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |