திருப்பத்தூர் அருகே தனது கள்ளக் காதலனை கொலை செய்து அவரை மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வெள்ளகுட்டை விவசாய கிணற்றில் ஒரு ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் கொலையானவர் ஆலங்காயம் புதூரை சேர்ந்த நாகராஜ் என்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவரின் செல்போனை ஆய்வு செய்து பார்த்தபோது கோகிலா என்ற பெண்ணுடன் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்தது. கணவனை இழந்த கோகிலா இரண்டு மகளுடன், தனியாக வசித்து வருகிறார்.
அவருக்கு ஆதரவாக கடந்த 8 வருடமாக நாகராஜன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நாகராஜன் கோகிலாவின் இரண்டு மகள்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை கோகிலா கண்டித்துள்ளார். இருப்பினும் நாகராஜன் தொடர்ந்து மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால், அவரது சகோதரரான வெங்கடேஷ் என்பவரிடம் இதனை கூறி அழுதுள்ளார். பின்னர் வெங்கடேசன் மற்றும் கோகிலாவும் சேர்ந்து நாகராஜனை கொலை செய்ய திட்டமிட்டனர்.
அதன்படி அவரை மதுகுடிக்க அழைத்துச்சென்ற வெங்கடேசன் போதை ஏறும் அளவிற்கு அவருக்கு ஊற்றிக்கொடுத்து, பின்னர் அவரை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து வந்து, கோகிலாவும், வெங்கடேசனும், சேர்ந்து கல்லை போட்டு கொலை செய்து கிணற்றில் வீசி எரித்துள்ளனர். பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.