திருவாரூர் மாவட்டத்தில் சொந்த அண்ணியை கழுத்தை அறுத்து கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் ஈவிஎஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி என்பவர். திருமணமாகிய இவர் தன் மனைவி மற்றும் சகோதரனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சுந்தர மூர்த்தியின் மனைவி சொர்ண பிரியாவுக்கும் அவரது தம்பி ராஜகோபாலுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
சண்டையின் போது ஆத்திரமடைந்த ராஜகோபால் அண்ணி என்றும் பார்க்காமல் சொர்ண பிரியாவின் கழுத்தை அழுதுள்ளார். ரத்தவெள்ளத்தில் கிடந்த சொர்ண பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.