Categories
சினிமா தமிழ் சினிமா

‘நீ படத்தில் வந்ததே ஏழு செகண்ட் தாண்டா’… கலாய்த்த ரசிகர்… தீனாவின் உருக்கமான பதில்…!!!

‘மாஸ்டர்’ படத்தில் நடித்தது குறித்து கலாய்த்த ரசிகருக்கு தீனா உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது . இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி தவிர மாளவிகா மோகனன் உட்பட ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்திருந்தது . ஆனால் பெரும்பாலான நட்சத்திரங்கள் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போகும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது என்று விமர்சனங்கள் எழுந்தது . குறிப்பாக சாந்தனு உட்பட சில ஹீரோவாக நடித்த நடிகர்கள் கூட ‘மாஸ்டர்’ படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து சென்றது அதிருப்தியை ஏற்படுத்தியது. விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற தீனா ‘மாஸ்டர்’ படத்தில் நடித்திருந்தார் .

இவர் கைதி, தும்பா உட்பட ஒரு சில திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கைதி படத்தைப் போலவே இந்தப் படத்திலும் தீனாவுக்கு முக்கியத்துவமான வேடம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் மாஸ்டர் படத்தில் தீனாவின் காட்சிகள் ஒரு சில வினாடிகள் மட்டுமே வந்து போனது . இந்நிலையில் தீனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் மாஸ்டர் படக் குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் . இந்தப் பதிவுக்கு ரசிகர் ஒருவர் ‘நீ இந்த படத்தில் வந்ததே ஏழு செகண்ட் தாண்டா’ என கலாய்த்து கருத்து தெரிவித்துள்ளார் . இதற்கு தீனா ‘எனக்கு அதுவே பெரிய விஷயம் பிரதர். அந்தப் படத்தில 7 செகண்ட் வருவதற்கே எனக்கு ஏழு வருஷம் ஆச்சு’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார் .

Categories

Tech |