Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு 18 வயது நிறைவடைந்து விட்டதா?… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் அனைவரும் கட்டாயம் கீழ்க்கண்ட ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் நேரிலும் ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். ஜனவரி 1, 2021 படி 18 வயது நிறைவடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார்.அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விரும்புவோர் அனைவரும் அங்கேயே விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர், முகவரி சான்றாக, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வங்கிப் புத்தகம், கிசான் பத்திரம், தபால் அலுவலக கணக்கு புத்தகம், குடும்ப அட்டை, வருமானவரி ஒப்படைப்பு சான்று, வாடகை ஒப்பந்தம், குடிநீர், தொலைபேசி, மின் இணைப்பு மற்றும் கேஸ் இணைப்பு ரசீது, சமீபத்தில் வந்த தபால் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொடுக்க வேண்டும். அதுமட்டுமன்றி பிறப்புச் சான்றிதழ், ஐந்து முதல் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிறந்த தேதி ஆவணமாக அளிக்கலாம். வருகின்ற 2021 ஜனவரியில் 18 வயது பூர்த்தி அடையும் நபர்களும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |