இந்தியன் ஆயில் நிறுவனம் முன்பதிவு செய்த 30 நிமிடத்தில் சிலிண்டர் உங்கள் வீட்டுக்கு வரும் என்று கூறியுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம் தட்கல் எல்பிஜி சேவையை தொடங்கியுள்ளது. இதன்படி எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு செய்த 30 முதல் 40 நிமிடத்தில் வீட்டுக்குள் வரும். பொதுவாக சிலிண்டர் முன்பதிவு செய்து இரண்டு அல்லது நான்கு நாட்களுக்குள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது இந்தியன் ஆயில் நிறுவனம் தட்கல் முறையை பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வர இருப்பதாக இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் கூறியுள்ளது.
எல்பிஜி சிலிண்டர் அழைப்பதற்காக ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து 25 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடுதல் 25 ரூபாய் செலுத்துவதன் மூலம் எல்பிஜி சிலிண்டர் பெறமுடியும். 28 கோடி நுகர்வோரை கொண்டுள்ள இந்தியன் ஆயில் நிறுவனம், அதில் 14 கோடி உள்நாட்டு எல்பிஜி சிலிண்டரை வழங்கிவருகிறது. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் இந்த சேவை தொடங்க இருப்பதாகவும், படிப்படியாக நாடு முழுவதும் இதனை விரிவுபடுத்த உள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.