செம்ப்டம்பர் 1 ஆம் தேதி நடக்கவிருந்த tnpsc குரூப்4 தேர்விற்கு சென்னை உயர்நீதிமன்றம் தற்கால தடைவிதித்துள்ளது .
வேலையில்லாத் திண்டாட்டம் ஆனது தற்போது இந்தியாவில் அதிகரித்து வரும் சூழலில் படித்த பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்வதை தங்களது இலட்சியமாக கொண்டு பயிற்சி வகுப்புகளுக்கு சென்று படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு துறைகளில் புதிய பணியிடங்களை நிரப்பாமல் தமிழக அரசு இழுத்தடித்து வந்தது .
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையமானது வருகின்ற செப்டம்பர் ஒன்றாம் தேதி தேர்வு நடைபெறும் என்றும், செப்டம்பர் ஒன்றாம் தேதி காண தேர்வில் விஏஓ இளநிலை ஊழியர்கள் போன்ற பணிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலமுருகன் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார் அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற tnpsc தேர்வுக்கான 500 காலி பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் அதில் தேர்ச்சி அடைந்த நபர்கள் காத்திருப்பு பட்டியலில் இருக்கிறார்கள் .
இந்நிலையில் புதியதாக மற்றொரு தேர்வை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் நடத்த இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் தேர்வுக்கு தற்கால தடை விதிக்க வேண்டும் என்றும் பாலா முருகன் வழக்கு தொடுத்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதிகள் வருகின்ற 26ம் தேதிக்குள் இதற்கு தக்க பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது