நெல்லையை சேர்ந்த அமமுக_வினர் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியை பெற்றது. மக்களவையில் 38 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி வெறும் ஒரு மக்களவை தொகுதியில் மட்டுமே வென்றது. அதே போல 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதியும் , அதிமுக 09 தொகுதியும் கைப்பற்றியது.இந்த தேர்தல்களில் அதிமுகவுக்கு மாற்றாக பார்க்கப்பட்ட TTV தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெரும் பின்னடைவை சந்தித்தது.
அனைத்து தொகுதிகளிலும் பரிசு பேட்டி சின்னத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் படு தோல்வியை சந்தித்தது அமமுக . இந்த தோல்வியால் தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.இந்நிலையில், நெல்லை அமமுக நிர்வாகிகள் , முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். இதனால் அமமுக தலைமை நிர்வாகிகள் செய்வதறியாது நிற்கின்றனர்.