விடுதலை சிறுத்தைகள் கட்சியை பாஜகவால் அச்சுறுத்த முடியாது என்று திருமாவளவன் ஆவேசமாக பேசியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனத்தில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் திறப்பு விழாவில் பங்கேற்று பெயர் பலகையை திறந்து வைத்துள்ளார். அப்போது அவர் பேசியுள்ளதாவது, மருத்துவக் கல்வியிலும் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடுகள் இல்லை என்பதை அனைவருக்கும் தெரிய செய்தது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். மேலும் இதுதொடர்பாக மத்திய அமைச்சர்களை சந்தித்து மனுவும் கொடுத்துள்ளோம். மேலும் முதலமைச்சர் 7.5% ஒதுக்கீட்டிற்கான முடிவை நிறைவேற்றினார்.
ஆனால் ஆளுநரின் ஒப்புதலுக்காக அவர் காத்திருக்கும்போது இதற்கான ஆணையை தமிழ்நாடு அரசே நிறைவேற்றலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சிதான் ஆலோசனை வழங்கியது. இதனால் தான் அந்த இட ஒதுக்கீட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் வரும் 21ம் தேதி அன்று அகில இந்திய அளவிலான வேளாண் உற்பத்தி பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க கூடிய சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாநில அரசானது மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறது. இது கண்டிக்கதக்கது. எனவே இதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தப்படும்.
பாஜக அதற்கான செயல் திட்டங்களை நிர்ணயிப்பதில்லை. மேலும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதையும் தீர்மானிப்பதில்லை. மேலும் எந்த கட்சி எந்த மாநிலத்தில் கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதையும் பாஜக தீர்மானிப்பதில்லை. இவை அனைத்தையுமே ஆர்எஸ்எஸ் தான் நிறைவேற்றுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் அனைவரையும் கேள்வி கேட்டு வருகிறது. இதனால் எந்தக் கட்சியின் தலைவர்கள் எந்த இடத்தில் பேட்டி அளித்தாலும் முதலில் திருமாவளவனை தான் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.
பாஜக எவரையும் அச்சுறுத்தல் மூலமாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று நம்புகிறது. ஆனால் எதற்காகவும் அசராமல் இருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியை அச்சுறுத்த முடியாது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும்தான் இந்தியாவிலேயே விலைபேசகூடிய கட்சியாக இல்லை. மேலும் பாஜக தலித்துகளை எப்படியாவது தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று முயன்று வருகிறது. தேர்தல் சமயங்களில் சமூக ஊடகங்களில் வதந்திகள் பலவற்றையும் பரப்பி வருகிறது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் திமுகவிற்கு இடையே விரிசல் ஏற்பட்டு இருப்பது போன்ற வதந்திகளையும் பரப்பி வருகிறார்கள் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.