Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அடிச்சது லாட்டரி…. 12 கோடி ரூபாய்க்காக காத்திருப்பு…. விற்பனையாளருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்….!!

லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தவருக்கு 12 கோடி ரூபாய் லாட்டரியில் விழுந்து அதிர்ஷ்டம் அடித்துள்ளது. 

தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டைக்கு அருகிலுள்ள ரவியதர்மபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் காதர். விவசாயியான இவருக்கு 3 மகன்கள் இருக்கும் நிலையில், இளைய மகனான சர்புதீன் என்பவர் கேரள மாநிலத்தில் ஆரியங்காவு என்ற பகுதியில் லாட்டரி சீட்டு வியாபாரம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு கேரள மாநிலத்திலுள்ள அடூர் பகுதியில் வசிக்கும் சபீனா என்ற பெண்ணுடன் திருமணமாகியுள்ளது. தற்போது இவர்களுக்கு பர்வேஸ் முஷரப் என்ற 15 வயதுள்ள மகன் உள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 17ஆம் தேதியன்று சர்புதீன் தன் கடையில் இருந்த லாட்டரி சீட்டுகள் அனைத்தையும் விற்பனை செய்துவிட்டு அருகில் உள்ள வேறொரு லாட்டரி கடையில் 300 ரூபாய் கொடுத்து கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரியை வாங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து எதிர்பாராத வகையில் அந்த லாட்டரி சீட்டிற்கு முதல் பரிசாக 12 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த சர்புதீன் அந்த லாட்டரி சீட்டை கடையில் கொடுத்து பணம் வாங்குவதற்காக முயற்சி செய்து வருகிறார்.

Categories

Tech |