வரி ஏய்ப்பு புகாரில் கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது. கிறிஸ்தவ மத போதகரான பால் தினகரன் இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் உலகம் முழுவதும் மதப்பிரச்சார கூட்டங்கள் நடத்தி வருகிறார். தந்தை டிஜிஎஸ் தினகரன் வழியில் மத போதனையில் ஈடுபட்டுவரும் பால் தினகரன் மீது வரி ஏய்ப்பு தொடர்ந்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள அலுவலகம் மற்றும் கோவையில் காருண்யா பல்கலைக்கழகம் என மொத்தம் 28 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.