Categories
சினிமா தமிழ் சினிமா

தனது நெருங்கிய தோழியை சந்தித்த நதியா… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை நதியா தனது நெருங்கிய தோழியை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .

மலையாள திரையுலகில் நடித்து வந்த நடிகை நதியா தமிழ் திரையுலகில் ‘பூவே பூச்சூடவா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 1985ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை பாஸில் இயக்கியிருந்தார் . இந்தப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து ரஜினிகாந்த் ,பிரபு ,சிவகுமார் ,சத்யராஜ், மோகன், சுரேஷ் உட்பட பல பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்தார் . இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி பெற்றது .

https://twitter.com/ActressNadiya/status/1351444222721683462

இதையடுத்து திருமணம் செய்துகொண்ட நதியா ஜெயம் ரவியின் ‘எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது வரை படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் நெருங்கிய தோழியை சந்தித்ததாக நடிகை நதியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . அதில் ’80களில் நல்ல நண்பர்கள்’ என பதிவிட்டு நடிகை குஷ்பு மற்றும் பூனம் தில்லான் ஆகியோருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |