Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாஜகவின் கீழ்தான் அதிமுக…. சசிகலா வந்ததும் எல்லாரும் ஓடிருவாங்க – கார்த்திக் சிதம்பரம்

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அதிமுக பாஜகவின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். 

சென்னை குரோம்பேட்டையில், மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர்களின் கூட்டமானது நேற்று தனியார் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உரையாற்றியுள்ளனர். அதன்பிறகு கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எங்களை பொறுத்தவரை திமுகவினரின் கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். மேலும் கண்டிப்பாக வரும் 2021 தேர்தலில் இந்த கூட்டணியானது மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

வரும் 23 ஆம் தேதியிலிருந்து தமிழ்நாட்டின் பல இடங்களில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட இருக்கிறார். மேலும் அதிமுக அரசானது பாஜகவின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. முதலாளி அழைத்ததும் தொழிலாளி செல்ல வேண்டும் என்பதுபோல தமிழ்நாட்டின் முதலமைச்சர் தற்போது டெல்லிக்கு சென்றுள்ளார். அவரால் எப்போதும் தமிழருக்குரிய உரிமைகளை பெற்றுத் தரவே முடியாது. மேலும் சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் அனைத்து அதிமுக நிர்வாகிகளும் சசிகலாவிடம் சென்றுவிடுவார்கள். தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தலில் தோல்வி அடைந்த பின்போ அனைத்து அதிமுகவினரும் சசிகலா தலைமையில் தான் செயல் படுவர் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |