இந்த ஆண்டு 41 சதவீத பொறியியல் படிப்புக்கான இடங்களுக்கு மாணவர் சேராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 494 பொறியியல் கல்லூரிகள் உள்ளது. இதிலுள்ள 1, 72 , 148 இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகின்றது. இந்த ஆண்டு பொறியில் படிக்க 1, 33, 116 மாணவர்களே விண்ணப்பித்துள்ளனர். இதனால் சுமார் 39 ஆயிரத்து 32 பொறியியல் இடங்கள் நிரம்பாது என்ற நிலை உருவாகியுள்ளது. விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 7_ஆம் தேதி முதல் 13_ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில் சுமார் 1,01,672 மாணவர்கள் மட்டுமே தங்களின் சான்றிதழை சரிபார்த்துள்ளனர். பொறியில் படிப்பிற்காக விண்ணப்பித்த மாணவர்களில் 31 , 444 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் சுமார் 70 ஆயிரம் பொறியியல் இடங்கள் நிரம்பாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மொத்த எண்ணிக்கையில் 41 சதவீதம் என்பது அதிர்ச்சியடைய வைக்கிறது. இதனால் இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான வீழ்ச்சி விதம் மேலும் அதிகரித்துள்ளது.