தேனி மாவட்டத்தில் கடனை திருப்பித் தராமல் மோசடி செய்த 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அனுப்பம்பட்டியல் வசித்து வருபவர் குமரேசன் மாரியம்மாள் தம்பதியினர். பெயிண்டராக வேலை செய்து வந்த குமரேசன் சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார். அதன்பின் தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை செலவிற்காக தன் சித்தியிடம் உதவி கேட்டுள்ளார்.
அவரது சித்தி மகன் நிதிஷ்குமார் அரண்மனை புதூர் இல் உள்ள தனது நண்பர் அழகு பாண்டி மற்றும் அவரது சகோதரன் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் மூலம் கடன் வாங்கி தருவதாக கூறினார். அதன் மூலம் நித்யா என்பவர் உங்களது வீட்டிற்கு 100க்கு ஒரு ரூபாய் வட்டி வீதத்தில் 2,50,000 கடனாக தருவதாக கூறினார்.
அதன்பின் குமரேசனின் மனைவி மாரியம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டினை நித்யாவின் மீது பத்திரப்பதிவு செய்து கொடுத்தனர். அதன் பின் ஒரு வாரம் கழித்து மாரியம்மாளை தொடர்பு கொண்ட நித்யா தனது 2,50,000 ரூபாய் கடன் தொகையை கொடுக்காததால் உங்களது வீட்டை ஜப்தி செய்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. கடன் தொகையை திரும்ப தராமல் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் புகார் அளிக்கப்பட்டது.புகாரின் பேரில் நித்யா நிதிஷ்குமார் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.