பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ட்விட்டரில் போட்டுள்ள புதிருக்கு அர்த்தம் தெரியாமல் நெட்டிசன்கள் குழம்பியுள்ளனர்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் டுவிட்டரில் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். அதில், ” 8…6…5. இங்கு மட்டும் ஒன்றே ஒன்று? இந்தப் புதிருக்கு விடை சொல்லுங்கள்.” என்று அவர் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார். கூட்டணி குறித்த மறைமுக தகவல் உள்ளதா இல்லை இட ஒதுக்கீடு தொடர்பாக எதுவும் சொல்ல வருகிறாரா என நெட்டிசன்கள் குழம்பியுள்ளனர்.