தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் (டி.என்.எஸ்.சி.பி) நிறுவனத்தில் 2021ஆம் ஆண்டிற்கான அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 31.01.2021ஆம் தேதிக்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பணி – அலுவலக உதவியாளர்
கல்வி தகுதி – 8ஆம் வகுப்பு தேர்ச்சி
காலிப்பணியிடங்கள் – 53
வருமானம் – ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை
வயது வரம்பு – 18 முதல் 35 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.01.2021
பணியிடம் – சென்னை
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tnscb.org/ என்ற இணையத்தளத்தை அணுகவும்.