Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஏழை மாணவியின் கனவு… நிறைவேற்றிய சிவகார்த்திகேயன்… குவியும் பாராட்டுக்கள்…!

ஏழை மாணவியின் மருத்துவப் படிப்பிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு வருட நீட் தேர்வு பயிற்சி கட்டணத்தை வழங்கியுள்ளார்.

திருச்சி மாவட்டம் கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற சஹானா என்ற மாணவி கூறியதாவது, நான் அரசு பள்ளியில் தான் படித்தேன் நீட் தேர்வுக்காக படிப்பதற்கு என்னிடம் போதிய பணம் இல்லை. இதனால் என்னுடைய மருத்துவ கனவு கலைந்து போய் விடுமோ என்ற அச்சம் இருந்தது.

ஆனால் என்னுடைய பள்ளியின் தலைமை ஆசிரியர் உதவியுடனும் நடிகர் சிவகார்த்திகேயனின் உதவியுடனும் நான் நீட் தேர்வுக்கான பயிற்சியை மேற்கொண்டேன். நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு ஒரு வருடப் பயிர்சிக்கான பணத்தை வழங்கினார். அதன் மூலம் நான் நன்கு கற்று நீட் தேர்வில் வெற்றி பெற்று இப்போது உங்கள் முன் நிற்கிறேன் என்று கூறினார்.

இதுகுறித்து மாணவியின் தாயார் கூறியதாவது, எங்களது வீட்டில் மின்சாரம் கூட இல்லை. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. எங்களை போல ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு ஒரு கனவே.ஆனால் அது இப்போது என் மகள் மூலம் நிறைவேறியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் எங்களது பரம்பரையிலேயே இவர்தான் முதல் டாக்டர் என்று தெரிவித்தார்.

Categories

Tech |