இன்றைய காலகட்டத்தில் மக்கள் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டு இருக்கின்றனர். வேலை, வேலை என்று அவர்கள் உடலை கவனிக்க மறந்துவிடுகின்றனர்.
தேவையற்ற உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக உடல் பருமன் ஆகின்றது. ஆயுர்வேதத்தின் படி உடல் பருமன் நோய்களின் மூலமாக கருதப்படுகிறது. சிலர் கட்டுக்கோப்பாக உடலை வைக்க முயற்சிக்கின்றனர். அதற்கு சில ஆயுர்வேத குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம்.
உடல் பருமனைக் குறைக்க மூன்று அல்லது ஆறு லவங்கப்பட்டை பொடியை 200 மில்லி தண்ணீரில் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக இருக்கும்போது ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் மற்றும் இரவு படுக்கும் முன் உட்கொண்டு வந்தால் படிப்படியாக எடை இழக்கும்.
உடல் பருமனைப் போக்க இஞ்சி சாற்றில், 2 டீஸ்பூன் தேனை கலந்து படுக்கைக்கு செல்லும் முன் தினமும் காலையில் உட்கொண்டால் சில நாட்களில் எடை குறையும். எடையை குறைக்க மருந்து மாத்திரைகள் கடுமையான பயிற்சி மேற்கொள்வது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எப்போதும் வீட்டில் உள்ள இயற்கைப் பொருட்களை வைத்து முயற்சிப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.