ரமேஷ் கண்ணா மற்றும் விமல் தென்னிநிதிய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகின்றது . இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள். வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு , நேற்று மனுக்களை வாபஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இறுதிப்பட்டியலில் பாக்யராஜ் அணியை சேர்ந்த நடிகர் ரமேஷ் கண்ணா மற்றும் விமல் ஆகியோரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு காரணம் இவர்கள் இருவரும் சங்கத்திற்கு ஐந்து வருடங்களுக்கு மேலாக சந்தா செலுத்த வில்லை என்று கூறி தேர்தலில் போட்டியிட தகுதி இல்லை என்று நிராகரித்துள்ளனர். இதுவரை வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் 68 பேர் போட்டியிடு _ கின்றனர். தலைவர் பதவிக்கு நாசர் , பாக்கியராஜ் போட்டியிடுகின்றனர். பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் ஐசரி கணேசன் போட்டியிடுகின்றார். துணைத்தலைவர் பதவிக்கு குட்டிபத்மினி , பூச்சி முருகன் , உதயா உள்ளிட்டோரும் , பொருளாளர் பதவிக்கு நடிகர் கார்த்தி மரம் பிரசாத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.