Categories
தேசிய செய்திகள் பல்சுவை

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பழம்… பெயர் மாற்றம்… குஜராத் முதல்வர் அறிவிப்பு…!

டிராகன் பழத்திற்கு கமலம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபாணி தெரிவித்துள்ளார்.

ஆப்பிள்,ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்ட பழங்கள் மனிதர்களுக்கு சில சத்துக்களை அளிக்கிறது. அந்த வரிசையில் டிராகன் பழமும் மனித உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.இந்நிலையில் டிராகன் பழத்தை தற்போது கமலம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபாணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, டிராகன் பழத்திற்கு மற்றொரு பெயர் சூட்ட முடிவு செய்துள்ளோம். அதன் வெளிப்புற தோற்றம் தாமரை மலரைப் போல் காட்சி அளிப்பதால் அவற்றிற்கு கமலம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Categories

Tech |