Categories
கிரிக்கெட் விளையாட்டு

“விராட் இல்லாமல் இந்தியா வெற்றி” விளையாட்டாக சொன்னது வினையாகியது…!!

ஆஸி முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பார்டர் விளையாட்டுக்காக கூறிய வார்த்தை வினையாக மாறியதாக ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. முக்கிய வீரர்கள் களத்தில் பங்கு பெறாத நிலையிலும் அறிமுக வீரர்களே இந்த சாதனையை நிகழ்த்தினர். எனவே இந்திய அணி பெற்ற வரலாற்று வெற்றிக்கு உலகம் முழுவதும் பல்வேறு பக்கங்களில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணி வீரர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் “விராட் கோலி இல்லாமல் இந்தியா ஆஸியை வீழ்த்தினால்” அந்த வெற்றியை அவர்கள் ஓராண்டு கொண்டாடலாம் என ஆஸி முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பார்டர் கவஸ்கர் டிராபி தொடங்குவதற்கு முன் கூறி இருந்தார். அந்த கருத்தை தற்போது நினைவுபடுத்தி இந்திய ரசிகர்கள் நீங்கள் விளையாட்டுக்கு சொன்ன வார்த்தை வினையாகிவிட்டது எனக் கிண்டலடித்து வருகின்றனர்.

Categories

Tech |