Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயிலில் இரண்டு சக்கர வாகனமா….? இத பண்ணிட்டு அப்புறம் ஏத்துங்க… விதிக்கப்பட்ட புதிய வழிமுறைகள்…!!

இரு சக்கர வாகனங்களை ரயிலில் அனுப்புவது குறித்த புதிய வழிமுறைகளை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

தென்னக ரயில்வே துறையானது இருசக்கர வாகனங்களை ரயில்கள் மூலம் அனுப்புவதற்கான புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. மேலும் இதற்காக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு சக்கர வாகனங்களின் பெட்ரோல் டேங்குகளில் இருக்கும் மொத்த பெட்ரோலையும் முதலில் நீக்க வேண்டும். அதன் பிறகு வாகனங்களை இயக்கி டேங்கில் பெட்ரோல் ஒரு துளி கூட இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் பெட்ரோல் டேங்க் மூடியை சிறிது நேரத்திற்கு திறந்து வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் காற்றில் பெட்ரோல் உலர்த்தப்பட்டதை   உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதன் பின்பு இரு சக்கர வாகனங்களை அனுப்புபவர்கள் விண்ணப்ப படிவத்தில் தங்களது வாகனங்களின் பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் இல்லை என்பதை உறுதியளிக்க வேண்டும். மேலும் பார்சலின் ரசீதிலும் இந்த வாக்குறுதியை ரயில்வே ஊழியர் பதிவு செய்வார். மேலும் இருசக்கர வாகனங்களை ரயில்வே துறையின் வழிமுறைகளின்படி சரியாக பார்சல் செய்ய வேண்டும். மேலும் இருசக்கர வாகனங்களை பதிவு செய்ய வரும் நபர்கள் வாகனத்திற்குரிய ஆர்.சி.புக்கின் அசலை காண்பித்துவிட்டு நகலை ரயில்வே ஊழியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கேரளாவில் சமீபத்தில் ரயில் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் இந்த புதிய விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று தென்னக ரயில்வே துறை வலியுறுத்தியுள்ளது.

Categories

Tech |