இந்தியாவுடன் பல்வேறு துறைகளில் நெருக்கமான உறவு ஏற்படுவதற்கு, ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சராக பதவியேற்கும் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி, பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதிலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டிலும் தீவிரமாக இருப்பவர். எனவே இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன’ என்று தெரிவித்துள்ளார்.
கிளின்டன் ஆட்சிக்காலத்திலேயே இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு மலர தொடங்கியது. ஒபாமா பதவிக்காலத்தில் தொடர்ந்தது. டிரம்ப் காலத்திலும் நீடித்தது. வரும் காலத்திலும் நல்லுறவு தொடரும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
வெளியுறவு கொள்கைகள், சர்வதேச விவகாரங்களில் அனுபவம் கொண்ட 58 வயது பிளிங்கன், நீண்ட காலமாகவே, ஜோ பிடனுக்கு ஆலோசகராக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.