Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எதுக்குடா இங்க நிக்குற ? ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்… தி.மலையில் பரபரப்பு …!!

சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் ஒருவரை கைது செய்து அவரிடமிருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காமாட்சி புறத்தில் சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது, அவர் அதே பகுதியில் வசிக்கும் மகா என்ற மகாதேவன் என்பதும், அந்த பகுதியில் சாராயம் விற்பனை செய்ததும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 5 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்து அழித்துவிட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |