செல்வமகள் திட்டத்தின் பயன்கள் மற்றும் பேலன்ஸ் தொகையை பார்ப்பது எப்படி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பெண் குழந்தைகளுக்காக மிகச்சிறந்த திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. இந்த திட்டமானது இந்திய தபால் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பெயரில் பெற்றோர் தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கலாம்.
கணக்கு தொடங்குவது எப்படி?
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பெண் குழந்தைகளை சேர்க்க அவர்களின் பிறப்பு சான்றிதழை முதலில் சமர்ப்பிக்க வேண்டும். பிறப்பு சான்றிதழ் இல்லாத பட்சத்தில் வயது சான்று ஆவணமாக பான் கார்டு, பாஸ்போர்ட் ஏதேனும் ஒன்றை வழங்கலாம். இதையடுத்து இந்த திட்டத்தை தொடங்க தபால் நிலையத்தை அணுகவேண்டும். பெற்றோரின் ஆதார் அட்டை மற்றும் குழந்தையின் ஆதார் அட்டை இல்லாவிட்டால் பிறப்பு சான்றிதழ் நகலை காண்பித்து கணக்கை தொடங்க முடியும். பின்னர் திட்டத்தின் விண்ணப்ப படிவத்தை நிரப்பி தேவையான ஆவணங்களுடன் புகைப்படத்தை சேர்த்து வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
வட்டி லாபம் மற்றும் இதன் பயன்கள்:
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வருடத்திற்கு 7.6 சதவீத வட்டி கொடுக்கபடுகிறது. சிறுசேமிப்பு திட்டத்திலேயே இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தான் அதிகமான வட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 27 வயதில் கணக்கு முடியும் போது மூன்று மடங்கு தொகை கிடைப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடைசியாக 24 வயதின் போதோ அல்லது பெண்ணுக்கு திருமணத்தின் போதோ கணக்கிலுள்ள மொத்தத்தையும் எடுத்துவிட்டு கணக்கை முடித்து விடலாம்.
லாபம் எவ்வளவு கிடைக்கும்?
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் சேமித்து வந்தால், திட்டத்தின் முடிவில் மொத்தம் ரூ.1.50 லட்சம் டெபாசிட் கிடைக்கும். வட்டித் தொகை வட்டியாக 3.29 லட்சம் மொத்தமாக பார்த்தால் ரூ.5.50 லட்சம் கிடைக்கும்.
பேலன்ஸ் பார்ப்பதுஎப்படி?
சேமிப்பில் பேலன்ஸ் தொகையை ஆன்லைன் மூலமாக பார்க்கலாம் அல்லது பாஸ்புக் வழியாக பார்க்கலாம். ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு தொடங்கி இருந்தால் அந்த வங்கியின் நெட் பேங்கிங் மூலம் பேலன்ஸ் பார்க்க முடியும். ஒருவேளை தபால் நிலையத்தில் தொடங்கியிருந்தால் தபால் நிலையத்திற்கு சென்று பாஸ்புக்கில் டெபாசிட் செய்யப்படும் விவரங்களை பதிவிட்டு அதன் மூலமாக தெரிந்து கொள்ள முடியும்.