Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இதெல்லாம் சரிபட்டு வராது… பின்னாடி பிரச்சனை வரும்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!

புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புதிதாக திறக்கப்பட்ட அந்த டாஸ்மாக் கடையை உடனடியாக மூடுமாறு திடீரென போராட்டம் செய்தனர். இதனையடுத்து மூலத்துறைபட்டு சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு போராடியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள் வசித்து வரும் பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு அங்குள்ள மாணவிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாகி விடும் என வாதாடினர். எனவே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக்கை உடனடியாக மூடும்படி பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி இதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

Categories

Tech |