அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் வைத்து பதவி ஏற்றார். கரோனா பரவலைத் தடுப்பதற்காக பைடனின் பதவியேற்பு விழா குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுடன் நடைபெற்றது. முதல்முறையாக, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவா்கள் முகக் கவசத்துடன் சமூக இடைவெளி விட்டு அமர்ந்தனர். ட்ரம்ப் ஆதரவாளா்கள் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற அச்சம் காரணமாக, இந்த முறை அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் வழக்கத்தைவிட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது.
Categories