தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர இன்னும் மூன்று, நான்கு மாதங்களே உள்ள நிலையில் ஆளும் அரசு தொடர்ச்சியாக மூன்றாவது முறை ஆட்சி கட்டலை அலங்கரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் மக்களை கவரக்கூடிய வகைகளில் திட்டங்களும், அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, தமிழகத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மானிய தொகை பெற ஜனவரி 25க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://startuptn.in/forms/tanseed/ என்ற முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.