மது விற்பனை செய்த 4 பேரை உடையார்பாளையம் அருகே காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பள்ளம் என்ற பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் பிற காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் தத்தனூர் கிராமங்களைச் சேர்ந்த உலகநாதன், சுப்பிரமணியன், கோவிந்தசாமி, வெண்ணிலா ஆகிய நால்வரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து இவர்கள் நால்வரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்