ஐடி துறையில் 91,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் கடந்த சில வருடங்களாகவே ஐடி துறை மந்தமான நிலையில் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. வருவாய் இழப்பு, பணிநீக்கம் போன்ற பிரச்சினைகள் நீடித்து வருகின்றன. இந்த நிலையானது கொரோனா வந்த பிறகு நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. ஐடி நிறுவனங்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தே பணியாளர்களை வேலை பார்க்க அனுமதித்தாலும் கட்டாய ஓய்வு, சம்பள குறைப்பு போன்ற அதிரடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் ஊழியர்கள் பலர் தங்கள் வேலையை இழந்து வேறு துறைகளுக்கும், சுய தொழில் செய்யவும் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அடுத்து வரும் நாட்களில் ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் தொழிநுட்ப சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் ஐடி நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை வழங்குவதில் மும்முரமாக உள்ளன.
2021-2022 இல் அதிக வேலைவாய்ப்பு வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ இணைந்து மொத்தமாக 91,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதன் மூலம் அதிக பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற வருடம் சுமார் 40 ஆயிரம் பேருக்கு டிசிஎஸ் வேலைவாய்ப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடமும்அதே போல வேலை வழங்கப்படும் ஏறி டிசிஎஸ் துணை தலைவர் தெரிவித்துள்ளார்.