Categories
உலக செய்திகள்

காதலர் தினத்திற்கு தடை…. உற்சாகத்தில் SINGLES…. இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்…!!

பிப்ரவரி-14 வரை ஊரடங்கை நீட்டித்திருப்பதால் சிங்கிளாக இருக்கும் இளைஞர்கள் காதலர்களை கலாய்த்து மீம்ஸ்களை போட்டு வருகின்றனர்.

உலகம் முழுவதும் முந்தைய கொரோனா வேகமாக பரவி வந்தது. இந்நிலையில் தற்போது புதிய கொரோனா பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து புதிய கொரோனாவிலிருந்து ஜெர்மனியை காப்பாற்றுவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து மாநில அரசுடன் ஜெர்மன் அதிபர் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். இந்த ஆலோசனை ககூட்டத்தில் 16 மாநகராட்சி தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது பிப்ரவரி 14ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்நிலையில் எவ்வளவோ தினங்கள் இருந்தும் காதலர் தினம் வரை ஊரடங்கை நீட்டிக்க அரசு முடிவு செய்திருப்பதாக, சிங்கிளாக இருக்கும் சில இளைஞர்கள் காதலர்களை கடுப்பேத்தும் விதமாக சில மீம்ஸ்களை போட்டு செமையாக கலாய்த்து வருகின்றனர். தற்போது இந்த மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

Categories

Tech |