வெள்ளையின மேலாதிக்கத்தை ஒழிப்போம் என்று அதிபர் ஜோ பைடன் முதலில் உறுதி ஏற்றுள்ளார்.
கடந்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் அபார வெற்றி பெற்றன.ர் இதையடுத்து நேற்று அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். டிரம்ப் பைடனுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு சிவப்பு கம்பாலா மரியாதையுடன் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். இந்நிலையில் ஜோ பைடன் அமெரிக்காவின் 46 வது அதிபராக பதவியேற்றர்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் பேசிய ஜோ பைடன், “உள்ளூர் பயங்கரவாதமான வெள்ளையின ஆதிக்கத்தை ஒழிப்போம்” என்று உறுதி கூறினார். “நான் அனைத்து அமெரிக்க அதிபராக இருப்பேன். பாதிக்கப்பட்டுள்ள உறவுகளை சீரமைத்து அமைதி மற்றும் பாதுகாப்புக்கான உண்மையான பங்காளராக இருப்போம் “என்று உறுதி அளித்துள்ளார்.