மொபட்டில் சென்ற போது முதியவர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நாயனதாங்கள் கிராமத்தில் முனியப்பபிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவர் அரும்பாக்கம் ஏரியில் மீன் பிடிக்க கடந்த 2ஆம் தேதி தனது பேரன் மகேஷ் என்பவருடன் சென்றுள்ளார். அதன்பின்னர் அவரது வீட்டிற்கு மொபட்டில் திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்து விட்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அதன்பின் சென்னை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக முதியவர் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் முனியப்பபிள்ளை பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து முனியப்பபிள்ளையின் மருமகள் ரேவதி என்பவர் கலவை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.