Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் வயதான அதிபர் இவர் தான்…!!

அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவின் மிக அதிக வயதான அதிபர் ஆவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் அபார  வெற்றி பெற்றன.ர் இதையடுத்து நேற்று அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். டிரம்ப் பைடனுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு சிவப்பு கம்பாலா மரியாதையுடன் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். இந்நிலையில் பைடன் அமெரிக்காவின் மிக அதிக வயதில் அதிபராக தேர்வானவர் ஆவார்.

அமெரிக்காவின் 46வது அதிபரான பைடனுக்கு வயது 78 ஆகும். நேற்று வாஷிங்டன் நகரில் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் ஜோ பைடன் அதிபராக முறைபடி பதவி ஏற்றார். மேலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்றார். இந்நிகழ்வில் முன்னாள் அதிபர்கள் ஒபாமா, புஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்கவில்லை.

Categories

Tech |