Categories
கிரிக்கெட் விளையாட்டு

97 வயதிலும் தனது மகனுக்காக…. இந்திய அணி வீரர் நெகிழ்ச்சி…!!

இந்திய அணி வீரர் ஒருவர் தனது 97 வயது தந்தை தனக்காக டெஸ்ட் போட்டி பார்த்தார் என்று கூறி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் இல்லாமல் அறிமுக வீரர்களாக இருந்தும் அபார வெற்றி பெற்றனர். இதனால் பல்வேறு பிரபலங்கள் மற்றும் திரையுலகினரின் பாராட்டுகளை இந்திய அணி பெற்று வருகிறது. இந்நிலையில் தன்னுடைய 97 வயது தந்தை தனக்காக அதிகாலையில் எழுந்து டெஸ்ட் போட்டி பார்த்ததாக இந்திய வீரர் நவதீப் சைனி நிகழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “என் தந்தைக்கு 97 வயது. இந்த வயதிலும் அவர் அதிகாலையில் எழுந்து எனக்காக ஒரு பந்தை கூட விடாமல் போட்டியை பார்த்துள்ளார். நான் தேசிய கீதம் பாடுவதை டிவியில் பார்த்து அழுது விட்டார். எனக்கு காயம் ஏற்பட்ட போது என் வீட்டுக்கு ஒட்டுமொத்த கிராமமே திரண்டு வந்து விசாரித்து இருக்கிறது” என கூறியுள்ளார்.

Categories

Tech |